வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு முழு வரி விலக்கு அளித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதாலும், சர்க்கரை விலை உயர்ந்து வருவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 10 லட்சம் டன் வரையிலான சர்க்கரை இறக்குமதிக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் சர்க்கரை இறக்குமதியில் ஈடுபட உள்ளது.

