சென்னையில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது, தி.மு.கவினரை இழிவாகப் பேசியதாகக் கூறி நாஞ்சில் சம்பத் மீது நாற்காலிகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத்தை தி.மு.கவினர் தாக்க முயன்றனர். அங்கிருந்த பவுன்சர்கள் அவரைத் தடுத்த போதிலும், நாற்காலிகள் வீசப்பட்டதால் அந்த அரசியல் விவாத நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

