சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எழும்பூர் - தஞ்சாவூர் இடையிலான உழவன் விரைவு ரயில், இன்று முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். அதேபோல், எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில், இன்று முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும்.

