அரசு கார் பயன்படுத்துவது குறித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். சொந்தமாக கார் வைத்திருந்தாலும், அரசுப் பணிகளில் ஈடுபடும்போது அரசு காரில் செல்வது ஒரு மரியாதையாகக் கருதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். கார் வைத்திருக்கும் தவெக எம்எல்ஏக்கள் யாரும் கார் கேட்டு விண்ணப்பிப்பதில்லை என்றும், ஏழ்மையில் இருக்கும் எம்எல்ஏக்கள் விண்ணப்பித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு சொந்தமாக வீடுகள் இருந்தாலும், அவர் அரசு பங்களாவில்தான் வசிக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த தன்னிடம், அரசு பங்களா ஒதுக்கீடு செய்யக் கோரி அவரே கடிதம் கொடுத்தார் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கார் இல்லை, வீடு இல்லை, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது என்று எவரும் குறிப்பிடலாம். ஆனால், அனைத்துக் கட்சிகளிலும் கார் மற்றும் வீடு வசதி இல்லாதவர்கள் பலர் உள்ளனர் என்று அவர் கூறினார்.


