தமிழக சட்டமன்றத்தில் டெண்டர் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏ சேகர்பாபு மற்றும் அமைச்சர் ரமேஷ் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. மக்கள் நலப்பணிகளுக்காக விடப்பட்ட டெண்டர்களை தவெக அரசு ரத்து செய்துள்ளதாக சேகர்பாபு குற்றம் சாட்டினார். கடந்த ஆட்சியின் நிலுவைகளை நிறைவேற்றுவது அடுத்த ஆட்சியின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், மக்களுக்குப் பயன்படாத திட்டங்களை மட்டுமே அரசு ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்தார். தேவையற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த சேகர்பாபு வெளியிட்ட பல அறிவிப்புகள் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

