சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது. காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில், மாலை நேரத்தில் மேலும் ரூ.1,120 அதிகரித்து மொத்தம் ரூ.2,000 உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,800-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.14,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

