தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டரை, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் வெறும் 1 பைசா கோரி பெற்றுள்ளது. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் முதலிடத்தில் (L1) தேர்வாகியுள்ளது.
தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, திட்டத்திற்கான கூலி, சேதாரம், ஹால்மார்க் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து கூடுதல் செலவுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 1 பைசா மட்டுமே அந்நிறுவனம் கோரியுள்ளது. இதனைத் தொடர்ந்து, டெண்டர் பட்டியலில் இடம்பெற்றிருந்த இதர நிறுவனங்களை விட மிகக் குறைந்த தொகையை முன்மொழிந்ததால் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

