நாட்டில் சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த ஜூலை 20-ம் தேதி கிலோ ரூ.48.18 ஆக இருந்த சர்க்கரை விலை, ஆகஸ்ட் 20-ம் தேதி ரூ.55.70 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை சர்க்கரை வியாபாரிகள் 400 டன்கள் மட்டுமே கையிருப்பு வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 1 முதல் மொத்தப் பயன்பாட்டாளர்கள் தங்களுக்குத் தேவையான 15 நாட்களுக்கான அளவை விட அதிகமாகச் சர்க்கரையைச் சேமித்து வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகள் அக்டோபர் 15 முதல் கரும்பு அரவையைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

