திருச்சியிலிருந்து 126 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, விமானி திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.
மீண்டும் திருச்சிக்குத் திரும்பிய விமானம், தரையிறங்குவதற்கு முன்னதாக சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் அச்சமடைந்தனர். பின்னர், இரவு 9.02 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


