தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் நான்கு மாதங்களுக்குத் தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு விநியோகம் செய்ய இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு முறையே 70:30 என்ற விகிதத்தில் மோதிரங்கள் தயாரித்து வழங்கப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.


