கோவை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர் விடுதிகளில் காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. மாணவர் அல்லாத நபர்கள் தங்கியுள்ளனரா மற்றும் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் போது, சில அறைகளில் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.


