சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு கார் வழங்குவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தாங்கள் இருவரும் கார் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
கார் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தி, தங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களைக் கட்டித் தருவது பயனுள்ளதாக இருக்கும் என அவர் வலியுறுத்தினார்.


