சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியாக முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் புதிய நிர்வாகிகளை நியமிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

