திமுகவில் 70 வயது உச்ச வரம்பு என்ற புதிய தீர்மானம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், 13 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த முடிவின்படி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.காந்தி, முத்துசாமி, சாக்கோட்டை அன்பழகன், ரகுபதி, சுந்தர், எஸ்.ஆர்.சிவலிங்கம், தளபதி, ராமகிருஷ்ணன் மற்றும் ஆவுடையப்பன் ஆகியோர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


