தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் கூட்டாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதன்படி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திரைப்படப் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதிய திரைப்படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாது.
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடி (OTT) தளங்களில் வெளியிட வேண்டும் என்ற விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

