தவெக அரசு 100 நாட்களைக் கடந்தும் மக்களுக்குப் பயனுள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்குத் தவெக அமைச்சர்களால் உரிய பதிலளிக்க முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழல் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமானால், தவெகவிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளியிட வேண்டியதுதானே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

