மகாராஷ்டிராவில் காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெறும் மோப்ப நாய்களின் உணவு மற்றும் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புச் செலவுகளையும் அரசே ஏற்கும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். 10 ஆண்டுகள் பணியாற்றிய நாய்களை ஓய்வுக்குப் பிறகு கைவிடக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஓய்வுபெற்ற நாய்களைப் பிறருக்குத் தத்து கொடுக்காமல், காவல்துறையின் கீழ் ஏற்கனவே அவற்றைப் பராமரித்து வரும் நபர்களிடமே தொடர்ந்து ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


