கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த 105 வயது முதியவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரசிக் மண்டல் என்பவர், தனது 74-வது வயதில், 1994-ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றார்.
தண்டனை காலம் முடிவதற்கு முன்பே அவரை விடுதலை செய்துள்ள நீதிமன்றம், அவர் இனி சுதந்திர மனிதராக வாழலாம் என அறிவித்துள்ளது. முன்னதாக, 2024-ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

