திமுக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், தற்போதைய ஆட்சியாளர்கள் மக்கள் நலனுக்காக உழைக்காமலும், கொள்கை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமலும் ஆட்சிக்கு வந்துள்ளதாக விமர்சித்தார்.
அவர்களைப் பார்த்து திமுகவும் அதே பாணியில் செயல்படக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், திமுக ஒரு போராட்டக் குணம் கொண்ட இயக்கம் என்பதை வலியுறுத்தினார். அரசியல் என்பது பொழுதுபோக்கிற்காக வந்ததல்ல, மக்களுக்காகப் போராடுவதற்காகவே உருவானது என்று அவர் தெரிவித்தார். நாம் நிரந்தரம் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.


