டி-மார்ட் நிறுவனம் காலாவதி தேதி முடிந்த கோதுமை மாவை மீண்டும் விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பது நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

