திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையின் முன்னாள் வட்டாட்சியர் வி.அய்யாச்சாமிக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸைப் பெற்ற 15 நாட்களுக்குள் அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட சுற்றறிக்கையால், குஜிலியம்பாறை பகுதியில் நிர்வாகச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

