சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, ஆவடி, பட்டாபிராம், திருவேற்காடு மற்றும் காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
காலை முதல் வெயில் வாட்டிய நிலையில், மாங்காடு, குமணஞ்சாவடி மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

