சர்வதேச விமான நிலையங்களில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக, வெளிநாடு செல்லும் பயணிகள் தங்களது கைப்பேசிக்கு வரும் இ-போர்டிங் பாஸைக் காண்பித்து குடியேற்ற அனுமதி (இமிகிரேசன் கிளியரன்ஸ்) பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்டிங் பாஸில் முத்திரைகள் சரியாகப் பதியப்படாததால், அவற்றை ஸ்கேன் செய்யும்போது ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



