திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் கௌதம் ஆகிய இருவரையும் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து நீக்கி அக்கட்சி உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.குமரவேல் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏழுமலையின் மகள் காதலித்த பிரவீன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏழுமலைக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையின்படி, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிவரும் காலங்களில் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

