கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில், கல்லூரி கல்வி இணை இயக்குநர் சிந்தியா செல்விக்கு, கல்லூரி கல்வி ஆணையர் பொன்னையா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெறாமல் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியது ஏன் என விளக்கம் கேட்டுள்ள ஆணையர், ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், உயர்கல்வி மற்றும் காவல்துறை நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு கல்லூரி முதல்வர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


