தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சந்தைப்பேட்டை சந்தையில் வாழை இலைகளின் விலை திடீரென பத்து மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை ஒரு கட்டு வாழை இலை 500 ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், தற்போது அதன் விலை 5,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பல்வேறு பெருநகரங்களுக்கு வாழை இலைகள் ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளதால், உள்ளூர் சந்தையிலும் அதன் தேவை மற்றும் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


