சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-வது கட்ட அகழாய்வுப் பணியில், வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான சுடுமண் கிண்ணங்கள் குவியல் குவியலாகக் கிடைத்துள்ளன.
மேலும், அகழாய்வுப் பகுதியில் ஐந்து அடுக்குகள் கொண்ட உறை கிணறு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அப்பகுதியின் பழமையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த அகழாய்வுப் பணிகள் மூலம், கீழடியின் பண்பாட்டுத் தடயங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளிப்பட்டு வருகின்றன.


