சென்னையில் பெய்த கனமழை காரணமாக, விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 9 விமானங்கள் வானில் வட்டமடித்தன. டெல்லி, மும்பை மற்றும் துபாய் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த இந்த விமானங்கள், வானிலை சீரான பிறகு ஒன்றன்பின் ஒன்றாகத் தரையிறங்கின.
இந்த மோசமான வானிலை சூழலால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டு தாமதமாகின.


