காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து 87 அடியை எட்டியுள்ளது. இந்த நீர்வரத்து இதே வேகத்தில் நீடித்தால், டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் போதிய நீர்ப்பாசனம் இன்றி பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதும், இது குறித்து அரசு ஆய்வு செய்து உரிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


