அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9,000 கனஅடி வீதம் காவிரி நீரைத் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பரிந்துரை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாளை அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


