தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, அவற்றை மூன்று வண்ணக் குறியீடுகள் மூலம் தரம் பிரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த தகவலை சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
இதன்படி, பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களுக்கு சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சீல் வைக்கப்படும். பராமரிப்பு தேவைப்படும் கட்டிடங்கள் மஞ்சள் நிற ஸ்டிக்கர் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்விதப் பிரச்சனைகளும் இன்றி பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள் மீது பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


