சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தலைமை செயலகத்தை நோக்கி அவர்கள் பேரணியாகச் சென்றபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



