நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலி தாக்கியதில் பாலகிருஷ்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பதிலளித்தார்.
சம்பந்தப்பட்ட புலியைப் பிடிப்பதற்காக நான்கு மருத்துவர்கள் அடங்கிய வனப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விரைவில் அந்தப் புலி பிடிக்கப்பட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அல்லது புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் அறிவித்தார்.



