பொதுக்கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கண்ணியக்குறைவாகப் பேசியதாக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். தேர்தல் தோல்வி மற்றும் விரக்தியின் காரணமாகவே திமுகவினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உறுதி அளித்துள்ளார்.




