டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையினால் நெற்பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இரண்டு ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதோடு, தார்பாயால் மூடப்பட்டிருந்த நெல்மணிகள் முளைத்து வீணாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் வினோத், அந்தப் பகுதிகளில் 151.4 மில்லி மீட்டர் மட்டுமே மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.



