கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டில் மென்பொருள் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அது தொடர்பான சரிபார்ப்பை வலியுறுத்தி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் இத்தகைய தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) சேமிப்பு கிடங்கு தொடர்பான விவகாரங்கள் குறித்து இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



