கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அந்தோணி சாமி உள்ளிட்ட 3 தமிழர்களின் உடற்கூராய்வு அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வனத்துறையினர் மிக அருகில் இருந்து அவர்களைச் சுட்டுக் கொன்றது இந்த அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தோணி சாமியின் மார்பில் சுடப்பட்டதால் ஏற்பட்ட அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியே அவரது மரணத்திற்கு காரணம் என உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த 3 பேரின் உடல்களிலும் 7 முதல் 10 விலா எலும்புகள் முறிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னதாக அவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது இந்த உடற்கூராய்வு முடிவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


