தமிழ்நாட்டில் ஹீமோபிலியா மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, எமிசிஜுமாப் (Emicizumab) எனும் மருந்தை விலையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் எம்.எஸ். ரவி இது குறித்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்த மருந்தை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கான பணிகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

