தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் குறித்து அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் விமர்சித்துப் பேசியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. ஆஸ்டின் பல்வேறு கட்சிகளில் இருந்தவர் என தளவாய் சுந்தரம் குறிப்பிட்டதே இந்த வாக்குவாதத்திற்கு காரணமாக அமைந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எம்எல்ஏ ஆஸ்டின் பேசும்போது அமைச்சரோ அல்லது அவை முன்னவரோதான் பதிலளிக்க வேண்டும், தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார் என திமுக எம்எல்ஏ கே.என்.நேரு கேள்வி எழுப்பி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

