பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
நாய்களை விஷம் கொடுத்தோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ கொல்லக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர் அங்கீகரித்த மருந்துகளை நரம்பு வழியாக செலுத்தி மட்டுமே கருணைக் கொலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




