கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு உடனடியாக நீக்கியுள்ளது. உள்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சந்தையில் கோதுமையின் விலை சரிவைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2025-26-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் சாதனை அளவாக 12 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகப்படியான உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.




