கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த 68 வயது மூதாட்டி ஹூர், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவர் வசித்து வந்த வாடகை வீட்டில், அவரது மறைவுக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனையில், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் நிறைந்த 30-க்கும் மேற்பட்ட மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. உள்ளூர் மக்கள் உதவியுடன் எண்ணப்பட்ட அந்தப் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.8,40,000 ஆகும். இதில் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகள் அதிகளவில் இருந்தன.
திருமணமாகாத ஹூர், தனது சகோதரியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். அவரது சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். கண்டெடுக்கப்பட்ட மொத்தப் பணமும் ஹூரின் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ரூ.6 லட்சத்தை ஒரு சகோதரரும், மீதமுள்ள ரூ.2,40,000-ஐ மற்றொரு சகோதரரும் பெற்றுக்கொண்டனர். அந்த ரூ.2,40,000 தொகையை அவர் உள்ளூர் மசூதிக்கு நன்கொடையாக வழங்கினார்.




