காவிரி நீரைத் தமிழகத்திற்கு உரிய முறையில் திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி நீரைத் திறந்து விடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இந்த வினாவை முன்வைத்தது.
விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பது தொடர்பான விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தை அணுகி முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


