தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பிற்காக 111 மருத்துவர்கள் காத்திருக்கும் நிலையில், காலியாக உள்ள 40 இடங்களை தமிழக அரசிடம் ஒப்படைப்பது எப்போது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், மருத்துவப் படிப்பிற்கான கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தைக் குறைத்து, காலியாக உள்ள இடங்களை மீண்டும் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்குமாறும், இது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


