சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்த 19 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்றுத் திட்டத்தின் கீழ், இவ்வளவு குறைந்த வயதில் உறுப்பு தானம் பெறப்படுவது இதுவே முதல்முறையாகும்.
தலைநீர் கோர்வை (Hydrocephalus) நோயால் பாதிக்கப்பட்டிருந்த அக்குழந்தை, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆறு நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது. குழந்தையின் பெற்றோரின் சம்மதத்தைத் தொடர்ந்து, மருத்துவ நடைமுறைகளின்படி உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.



