சட்டப்பேரவையில் கடந்த இரண்டு நாட்களாக திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தரக்குறைவாகப் பேசிக்கொள்வது மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக சபாநாயகர் ஜெ.டி.சி. பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால், மக்கள் இதைப் பார்த்து என்ன நினைப்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையின் மரபு, கண்ணியம் மற்றும் கௌரவத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்புக்கும் உண்டு என்று அவர் வலியுறுத்தினார்.



