பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக இதுவரை 48 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு மொத்தம் 5846 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
தேவைப்படும் நிலங்களில் 3774 ஏக்கர் பட்டா நிலங்களாகும். இதில் 2681 ஏக்கர் மூன்றுபோகம் விளையக்கூடிய விவசாய நிலங்களாகவும், 1972 ஏக்கர் அரசு நிலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதில் 1558 ஏக்கர் நீர்நிலைகளும் அடங்கும்.
இதுவரை 1802 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்திற்குத் தேவையான நிலங்களில் 90 சதவீத நிலங்கள் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.



