கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை, மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பீட்டர், அந்தோணிசாமி மற்றும் குமார் ஆகிய மூவர் கொல்லப்பட்ட இந்த வழக்கு தற்போது சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த மூன்று பேரையும் காவல்துறையினர் பிடித்து வைத்திருந்த நிலையில், அவர்களுக்கு அருகிலேயே வைத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



