காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கர்நாடக அரசு அடுத்த 15 நாட்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.



