பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், மனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் காலக்கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மனு தாக்கல் செய்யத் தவறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது விதிமுறை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதிமன்றம், இந்த உத்தரவை முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்புக்கு பிறப்பித்துள்ளது.
